search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தண்டராம்பட்டு குழந்தைகள் காய்ச்சல்"

    தண்டராம்பட்டு அருகே ஒரே கிராமத்தில் 5 குழந்தைகள் உள்பட 10 பேருக்கு வாந்தி- மயக்கம், காய்ச்சல் ஏற்பட்டதால் மருத்துவக்குழுவினர் 24 மணி நேர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில் உள்ள கொழுந்தம்பட்டு கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு நேற்று முன்தினம் 5 குழந்தைகள் உள்பட 10 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம், காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் சாத்தனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்றனர்.

    பின்னர், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பரிசோதனை செய்ததில் கங்கா (வயது 5), காவியா (7), மோகன் (7), ஜனனி (5), வெங்கடேசன் (5) ஆகிய 5 குழந்தைகள் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. மற்றவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பதும் தெரிய வந்தது. இந்த 10 பேரும் தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கொழுந்தம்பட்டு கிராமத்துக்கு, சாத்தனூர் அணையில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் பாசி படிந்தும், மண் கலந்தும் வருவதாக பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் செய்தும், அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. எனவே, பாதுகாப்பற்ற தண்ணீரால் தான் இந்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக பொதுமக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

    ஒரே நேரத்தில் 10 பேர் மஞ்சள் காமாலை மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளதால், வட்டார மருத்துவ அலுவலர் பாலாஜி மேற்பார்வையில் நடமாடும் மருத்துவக் குழு அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×